நடிகர் சிவக்குமார் அரசியலுக்கு வருகிறாரா?

நடிகர் சிவக்குமார் அரசியலுக்கு வருகிறாரா?
Updated on
1 min read

நடிகர் சிவக்குமார் அரசியலுக்கு வருவதாகவும் பா.ஜ.க. சார்பில் போட்டியிடப்போவதாகவும் கடந்த சில நாட்களாக செய்தி பரவி வருகிறது.

இதுகுறித்து நடிகர் சிவக்குமாரிடம் கேட்டபோது, “ஒருமுறை, சேலத்திலிருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் சென்றபோது பயணச்சீட்டுக் கொடுக்கும் அலுவலரிடம், “இன்று இரவோடு என் மகனுக்கு 18 வயது முடிந்து 19 வயது தொடங்குகிறது. அவனுக்கு முழுப் பயணச்சீட்டு கொடுங்கள்!” என்று கேட்டவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.

9 ஆண்டுகள் நாட்டை ஆண்டு, 9 ஆண்டுகள் சிறையில் கழித்தவர், பெருந்தலைவர் காமராஜர். அவர் இறந்தபோது தலைமாட்டில் ரூ.140 பணம் இருந்தது. அதுதான் அவர் சேர்த்த சொத்து.

இவர்களைப் போன்ற மாமனிதர்கள் நாட்டை ஆண்ட காலத்தில் அரசியலுக்கு வந்திருந்தால் தான் அது பெருமையான விஷயம். எனக்கு கனவிலும் இப்படி ஒரு எண்ணம் எழுந்ததில்லை. இது முழுக்க முழுக்க வதந்தி!” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in