

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''செம்மரக் கடத்தல்காரர்களை பிடிக்கிறோம் என்ற பெயரில் ஆந்திர மாநில காவல்துறை அப்பாவி தமிழர்கள் 32 பேரை கைது செய்து பல கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆந்திர அரசு கைது செய்த 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.