

பொதிகை தொலைக்காட்சியில் ஒவ் வொரு சனிக்கிக்கிழமையும் இரவு 9.30 மணிக்கு இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய ‘குறை யொன்றுமில்லை’ என்ற வரலாற்றுத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ‘தி இந்து’வுடன் இணைந்து பொதிகை தொலைக்காட்சி இந் நிகழ்ச்சியை வழங்கி வருகிறது.
இன்று இரவு 9.30 மணிக்கு ஒளி பரப்பாகவுள்ள 51-வது அத்தியாயத் தில், ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் ‘ரமோன் மகசேசே’ விருது எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வழங்கப்பட்டதன் சுவாரஸ்யமான தொகுப்பு ஒளிபரப்பாகிறது. மேலும் 1960-களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், அரியகுடி ராமானுஜ ஐயங்கார், முசிறி சுப்ரமண்ய ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் மற்றும் சித்தூர் சுப்ரமண்ய பிள்ளை உள்ளிட்ட இசை மேதைகளுடன் சேர்ந்து எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும் ஆஸ் தான வித்வான் விருது அளித்த தக வல்களும் இடம்பெறும். அத்துடன் பத்மவிபூஷண் விருது மற்றும் திருமலை திருப்பதி தியாகராஜ சுவாமி கமிட்டி வழங்கும் சப்தகிரி சங்கீத வித்வான் மணி விருதுகள் பற்றிய சுவையான தகவல்களும் இடம்பெறும். அத்துடன் அரிய சில புகைப்படங்களும், பாடல்களும், பல்துறை கலைஞர்களின் பங் களிப்போடு ஒளிபரப்பாகிறது.
இந்நிகழ்ச்சியின் மறுஒளி பரப்பை செவ்வாய் இரவு 9.30 மணிக்கு பொதிகை தொலைக் காட்சியில் காணலாம்.