

அதிமுகவை இணைப்பதில் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய தற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக தமிழக முதல்வரை பிரதமர் சந்தித்ததை அரசியலாக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசின் 3 ஆண்டு நிறைவு விழா சென்னையில் உள்ள அந்த கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழில் இணையதளம் தொடங்கப்பட்டது. மேலும் மோடி உருவப்படம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களும் வெளியிடப்பட்டன. இந்த விழாவில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச். ராஜா, மாநில துணைத் தலைவர் அரசகுமார், மாநில செயலாளர் கரு. நாகராஜன், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது:
விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோருக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட் டுகின்றன. இதில் உண்மை இல்லை. மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கும் நிதி அதிகரிக்கப்பட் டுள்ளது. மெட்ரோ ரயில் திட் டத்துக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. மின் திட்டங்களுக்கு ரூ. 9 ஆயிரம் கோடி, வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 1,500 கோடி வழங்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு திட்டத்தின்படி 75 லட்சம் விவசாயிகளுக்கு காப்பீடு அட்டைகள் வழங்க, அட்டைக்கு தலா ரூ. 300 என மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு திட்டங்களுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதி விலையில் தமிழகத்துக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.
தமிழக அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி அதிமுக அணிகளை இணைக்க பிரதமர் மோடி கட்டப் பஞ்சாயத்து நடத்துகிறார் என்று ஸ்டாலின் கூறுகிறார். இது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சமீபத்தில் சந்தித்துள்ளார். மக்கள் நலனுக்காக நடக்கும் சந்திப்புகளில் தவறில்லை.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கடிதம் மட்டும்தான் எழுதினார். பிரதமரை சந்திக்கவில்லை. பிற கட்சியைச் சேர்ந்த முதல்வரை பிரதமர் பார்ப்பதை அரசியலாக்கக் கூடாது. பண மதிப்பு நீக்க நடவடிக் கைக்குப் பிறகு வந்த உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக வெற்றி பெற் றுள்ளது. பஞ்சாபை தவிர அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பல சாதனை களை பாஜக அரசு செய்துள்ளது. குறிப்பாக 3 ஆண்டுகளாக ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்துள் ளோம். இவ்வாறு அவர் பேசினார்.