

பொதுப்பணித்துறையில் பல் நோக்கு பணியாளர்கள் பல ஆண்டுகள் பணிபுரிந்தும் குறைந்த ஊதியம் பெறுவதாகவும், அரசு பணியில் இருப்போருக்கு திருமணத்துக்கு பெண் தர மறுப்பதாகவும் பேரவையில் திமுக புகார் தெரிவித் தது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
சிவா (திமுக):
பொதுப்பணித் துறையில் பணிபுரியும் பல்நோக்கு பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியல் துறையால் வெளியிட்டும் பதவி உயர்வு வழங்காதது ஏன்? அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் தரப்படுகிறது?
அமைச்சர் நமச்சிவாயம்:
மாதந் தோறும் 16 நாட்கள் வேலை தரப் படுகின்றன.
சிவா (திமுக):
குறைவான ஊதியம் பெற்று எப்படி குடும்பம் நடத்த முடியும்? அரசே இது போன்று செய்யலாமா? குறைந்த பட்ச ஊதியம் தர வேண்டாமா? தொழிலாளர் துறை அமைச்சர் இதை கவனிப்பதில்லையா?
அமைச்சர் கந்தசாமி:
பாப்ஸ் கோவில் ரூ. 56 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊதியம் போட முடியவில்லை. தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தாலும் என்ன செய்வது?
சிவா:
அரசில் வேலை செய் வோருக்கும் மோசமான சம்பளம் தரப்படுகிறது. இளம் வயதில் வேலைக்கு வந்து அவர்களின் வாழ்க்கையே வீணாகிறது. மாதத் தில் பாதி நாட்கள் வேலை தந்து எப்படி குடும்பம் நடத்துவார்கள். புதுச்சேரி அரசின் வேலை என்றால் கையெடுத்து கும்பிட்டு ஓடுகிறார்கள். திருமணம் செய்ய மறுக்கிறார்கள். அமைச்சர்கள் வேலைக்கு வைத்தார்கள் என்றால் யாரும் திருமணத்துக்கு பெண் தருவதில்லை.
அமைச்சர் நமச்சிவாயம்:
மக்கள் நலனில் அக்கறை உள்ளது. நிச்சயம் நல்லது செய்வோம். அரசு பரிசீலனையில் உள்ளது. அனைத்து தொகுதியை சேர்ந் தோரும் இருக்கிறார்கள். அரசுக்கு அக்கறை இருக்கிறது. கலந்து பேசி நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.