

மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்டியை உடைத்து பாரிமுனை யில் ரூ.12 லட்சம் திருடப்பட் டுள்ளது.
மண்ணடியைச் சேர்ந்தவர் ஜாவீத் முகைதீன். கோயம்பேட்டில் வாழைப்பழம் விற்பனை செய்யும் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வசூலான பணத்தை உரிமையாளரிடம் கொடுக்க மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
பாரிமுனை 2-வது கடற்கரைச் சாலையில் உள்ள வங்கி ஒன்றின் அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது, அங்கு வந்த சிலர் ஜாவீத் முகைதீன் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து உள்ளே வைத்திருந்த ரூ.12 லட்சத்தை திருடிச் சென்றனர்.
சிறிது நேரத்துக்கு பிறகு வந்த ஜாவீத் முகைதீன் பணம் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வடக்கு கடற்கரைச் சாலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமராவில் திருடும் காட்சி பதிவாகி உள்ளது. அதை அடிப்படை யாக வைத்து போலீஸார் விசார ணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.