

நியூசிலாந்து நாட்டுக்கு செல் லும் நோக்கத்துடன் திருச்செந் தூரில் தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் 9 பேரிடம் கியூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் இருந்து 14 தமி ழர்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன், சுற்றுலா விசாவில் தமிழ கம் வந்துள்ளனர் இவர்கள், தமிழகத்தில் சென்னை, மதுரை, ராமேசுவரம், பழநி, வேளாங்கன்னி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
இவர்களில் 5 பேர் கன்னியா குமரியிலும், 9 பேர் திருச்செந் தூரிலும் விடுதியில் தங்கியிருந் தனர். இது தொடர்பாக தகவல் கிடைத்ததன் பேரில் தமிழக கியூ பிரிவு போலீஸார், அவர் களிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் நியூசிலாந்துக் குத் தப்பிச் செல்ல முன்னேற் பாடுகளை செய்துகொண்டி ருந்தது தெரியவந்தது. மேல் விசாரணைக்காக அவர்கள் 9 பேரையும் கியூ பிரிவு போலீஸார் நேற்று கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்றனர்.