அஞ்சல் நிலையத்தில் பாஸ்போர்ட் மார்ச் மாதம் அறிமுகம்

அஞ்சல் நிலையத்தில் பாஸ்போர்ட் மார்ச் மாதம் அறிமுகம்
Updated on
1 min read

அஞ்சல் அலுவலகங்களில் பாஸ்போர்ட் பெறும் புதிய வசதி வரும் மார்ச் மாதம் தொடங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1.15 கோடி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொதுமக் களின் வசதிக்காக அஞ்சல் அலுவலகங்களில் பாஸ்போர்ட் பெறும் புதிய வசதி அடுத்த மாதம் முதல் தொடங்கப்படுகிறது. முதற்கட்டமாக, தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்குவங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் இவ்வசதி தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் இவ்வசதி தொடங்கப்படுகிறது.

இத்தகவலை, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in