அரசு வருவாய், நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது ஏன்? - நிதியமைச்சர் விளக்கம்

அரசு வருவாய், நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது ஏன்? - நிதியமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

உலக பொருளாதாரத்தில் ஏற்பட் டுள்ள மந்தநிலையின் தாக்கத் தால் வரி வருவாய் குறைந்து வருவாய் மற்றும் நிதிப் பற்றாக் குறை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து திமுக உறுப் பினர் எ.வ.வேலு பேசிய தாவது:

தமிழக அரசின் வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை அதி கரித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை 2.96 சதவீதத்தை எட்டியுள்ளது. வரும் 2017-18 நிதியாண்டில் இது 3.34 சதவீ தமாக இருக்கும் என பட்ஜெட் உரையிலேயே குறிப்பிடப்பட்டுள் ளது. இதை எப்படி சரிகட்டப் போகிறீர்கள்.

7-வது ஊதியக் குழு பரிந் துரைகளை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க அரசு அலுவலர்கள் குழு அமைக்கப்படும் என பட்ஜெட்டில் உள்ளது. அது எப்போது அமைக் கப்படும். 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏன்?

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம்:

கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக தமிழகத்தின் வரி வருவாய் குறைந்துள்ளது. வருவாய் வரவுகளுக்கும், வருவாய் செலவினங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசமே வருவாய் பற்றாக்குறை.

3 சதவீதத்துக்குள்..

மொத்த வருவாயில் 40 சதவீ தம் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் துக்கு செலவாகிறது. இதுதவிர மக்கள் நலத் திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், மின்சாரம், உணவு மானியம் என பலவேறு நலத் திட்டங்களுக்கும் செலவு அதிகமாகிறது. வருவாய் குறைந் துள்ளது என்பதற்காக இந்த செலவுகளை குறைக்க முடியாது. இன்றியமையாத பணிகளுக்கு மட்டுமே நியமனம் செய்யப்படுகிறது. எனவேதான் வருவாய் பற்றாக்குறையும், நிதிப் பற்றாக் குறையும் அதிகரித் துள்ளது. நிதிப் பற்றாக்குறை வரையறுக்கப்பட்ட 3 சதவீதத் துக்குள் உள்ளது.

நிதிநிலை சீராகும்

சட்டப்படி பட்ஜெட்டில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிதி நிலையை கணித்துக் கூற வேண்டும். அதன்படியே 2017-18ல் 3.34 சத வீதம், 2018-19ல் 2.96 சதவீதம் என்ற அளவில் நிதிப் பற்றாக்கு றை இருக்கும் என கணிக்கப்பட் டுள்ளது. 3.34 சதவீதத்தை குறிப் படும் எ.வ.வேலு, 2018-19ல் 2.96 சதவீதமாக இருக்கும் என்பதை குறிப்பிடவில்லை. வரும் ஆண்டு களில் தமிழக அரசின் வருவாய் அதிகரித்து நிதிநிலை சீராகும். அப்போது வருவாய், நிதிப் பற்றாக்குறை குறையும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in