Published : 24 Jun 2016 07:59 AM
Last Updated : 24 Jun 2016 07:59 AM

திமுகவுக்கு தலைவர் கருணாநிதியா? ஸ்டாலினா?- சட்டப்பேரவையில் முதல்வர் கேள்வி

கச்சத்தீவு விவகாரத்தில் என்னுடைய கேள்விகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி சட்டப் பேரவைக்கு வந்து பதிலளிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். திமுகவுக்கு தலைவர் கருணாநிதியா, இல்லை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

கடந்த 1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டபோது, முதல்வராக இருந்த கருணா நிதி அதை தடுக்க தவறியது தொடர்பாக கடந்த 20-ம் தேதி எடுத்துக் கூறினேன். இது தொடர்பாக, 21-ம் தேதி கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். அதில் கச்சத்தீவை தாரை வார்க்க எந்தக் காலத்திலும் ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 2013-ம் ஆண்டு மே மாதம் டெசோ அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

இதில், 1974-ல் திடீரென அறிவிப்பு வந்ததும்தான் அதுபற்றி தெரியும் என்றதும், 2013-ல் டெசோ தீர்மானத்தில் திமுக அரசு வலியுறுத்தியதால் ஒப்பந்தத்தில் சில ஷரத்துக் கள் சேர்க்கப்பட்டன என்ற தும் ஒன்றுக்கொன்று முரண் பாடானதுதானே? இதன்மூலம் தாரை வார்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பதுதானே பொருள்.

(அப்போது ஜெ.அன்பழ கன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் எழுந்து பேச வாய்ப்பு கேட்டனர். ஆனால், பேரவை தலைவர் தனபால் வாய்ப்பு அளிக்கவில்லை)

முதல்வர் ஜெயலலிதா:

நான் இந்தக் கேள்விகளை கருணாநிதியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் பதில் சொல்லட்டும். பதில் சொல்ல முடியவில்லை என் றால் கூச்சல் போடுவதா? உங்கள் தலைவர், தலைவர் தானா அல்லது இங்குள்ள எதிர்க்கட்சி தலைவர் உங்கள் தலைவரா? கூச்சல் போடு வதால் ஒன்றும் ஆகப்போவ தில்லை. நான் கேள்விகளை கேட்டே தீருவேன்.

(அப்போது துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் எழுந்து ஆட்சேபம் தெரி வித்தனர். துரைமுருகன் பேச வாய்ப்பு கேட்டார்.)

பேரவை தலைவர் தனபால்:

முதல்வர் பேசும் போது குறுக்கிடக் கூடாது. அவர் பேசி முடித்ததும் விளக்கம் கூறுங்கள். புதிய உறுப்பினர்கள் விதிகளை படித்து அதன்படி நடந்து கொள்ளுங்கள்.

முதல்வர் ஜெயலலிதா:

திமுக தலைவர் கருணாநிதி இந்த அவை உறுப்பினர். அவர் இங்கே வந்து பதில் சொல்வதை விட்டு, வெளியே அறிக்கை கொடுத்துக் கொண் டிருக்கிறார். அந்த அறிக்கை பற்றித்தான் பேசிக் கொண் டிருக்கிறேன். உங்களால் முடியவில்லை என்றால் உட் காருங்கள். அறிக்கை கொடுத் தவரே வந்து பதில் சொல்லட் டும். இன்னும் சில நிமிடங்களில் நான் பதிலுரையை முடித்து விடுவேன். அதன்பின் அவர்கள் பேச விரும்பினால் அனுமதிக்கலாம்.

வெளிநடப்பு

தொடர்ந்து முதல்வரை பேச விடாமல் திமுக எம்எல்ஏக்கள் எழுந்து வாய்ப்பு கேட்டனர். இதற்கு அதிமுக தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. திமுகவினருக்கு பேச அனுமதி அளிக்காததால் மு.க.ஸ்டாலின் உட்பட அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் காங்கிரஸ். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

திமுக உறுப்பினர்கள் கிட்டதட்ட ஒன்றரை மணி நேரம் அமைதியாக அமர்ந்து என் உரையை கேட்டனர். கச்சத்தீவு பற்றி சில கேள்விகளை எழுப்ப முயன்றதும், ஓட்டம் பிடித்துவிட்டனர். இதைத் தான் எதிர்பார்த்தேன். அனை வருக்கும் நான் நினைவுபடுத்த விரும்புவது, கருணாநிதி இந்த அவையின் உறுப்பினர். சட்டப்பேரவை உறுப்பினர் என்ற வகையில் அவைக்கு வர எல்லா உரிமையும் அவ ருக்கு உண்டு.

அவர் இந்த அவைக்கு வந் திருக்கலாம். தனது கருத்து களை தெரிவித்திருக்கலாம். கருணாநிதி விட்ட அறிக்கை தொடர்பாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். கருணா நிதியை பார்த்துதான் கேள்வி களை கேட்டுக் கொண்டிருக் கிறேன். அதற்கு திமுக உறுப் பினர்களால் பதில் சொல்ல முடியவில்லை என்றால், அவர் கள் தங்கள் தலைவரை இங்கு அழைத்து வரவேண்டும். அவர்களுக்கு யார் தலைவர் என்ற குழப்பம் வேறு. அவர்கள் தலைவர் திமுகவின் தலைவர் என்று குறிப்பிடும் கருணாநிதியா அல்லது இங்கு அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சி தலைவரா? அந்த தலைவர் கருணாநிதி வேண்டும் என்றால் இந்த அவைக்கு வந்து பதில் சொல்லலாம்.

இவ்வாறு முதல்வர் கூறினார். தொடர்ந்து கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக சில கேள்விகளையும் முதல்வர் எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x