அமைதிக்கான நோபல் பரிசு: சத்யார்த்தி, மலாலாவுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

அமைதிக்கான நோபல் பரிசு: சத்யார்த்தி, மலாலாவுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து
Updated on
1 min read

2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெறும் சமூக அர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய்-க்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய்க்கும் வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

கைலாஷ் சத்யார்த்தி, தன் இயக்கத்தின் மூலம் இதுவரை 80,000 குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்கள் கல்வி கற்க வழி செய்திருக்கிறார்.

இளம் சமூகத்தின் உரிமைகள் மற்றூம் அவர்கள் சுதந்திரத்தை பாதுகாப்பது போன்ற உயரிய சிந்தனையோடு செயல்பட்டு வரும் அவருக்கு கிடைத்த இப்பரிசு மிகப் பெரிய வெற்றியாகும்.

உலக அமைதிக்காகவும், இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் பாடுபட்ட காந்தியடிகள் பிறந்த இந்த அக்டோபர் மாதத்தில் இந்தியா, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவேறு சமயத்தைச் சார்ந்த சாதனையாளர்களுக்கு கிடைத்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த கைலாஷ் சத்யார்த்திக்கும், இளம் வயதிலேயே நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலாவுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in