Published : 16 Sep 2016 01:05 PM
Last Updated : 16 Sep 2016 01:05 PM

தி.மலை கிராமத்தில் தொடக்கப் பள்ளிக்காக ரூ.30 லட்சம் மதிப்பு நிலத்தை கொடுத்த தலைமை ஆசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட துளுவ புஷ்பகிரி கிராமத்தில் அரசு நிதி உதவிபெறும் தொடக்கப் பள்ளி உள்ளது.

35 ஆண்டுகளுக்கு முன்பு, அரசிடம் இந்தப் பள்ளியை ஒப்படைத்தது நிர்வாகம். அதன் பிறகு, பள்ளிக் கல்வித் துறையின் நேரடி கண்காணிப்பில் இயங்குகி றது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 48 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களை வழி நடத்தும் பணியில் 2 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, இடவசதி தடையாக இருந்தது. அங்குள்ள தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை பள்ளிக்கு எழுதிக் கொடுத்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி. சந்தை மதிப்பில் தற்போது அந்த இடம் ரூ.30 லட்சமாகும்.

சில தடைகளைத் தாண்டி, பள்ளிக் கட்டிடம் எழுந்துள்ளது. கொடிக் கம்பம் அருகே திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. மாநில நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு சுற்றுச் சுவரை கட்டிக் கொடுத்துள் ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட் சித் துறை. பள்ளிக் கட்டிடம் கட்டும் பணியை கட்டிடக் குழு மேற் பார்வை செய்து வருகிறது.

இது குறித்து கட்டிடக் குழுவில் உள்ளவர்கள் கூறும்போது, “கல்வி ஆர்வலர்களின் நிதி உதவியால் சுமார் ரூ.12 லட்சம் வரை செலவிடப் பட்டு பணி நடைபெற்றது. மேலும், ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. அந்த நிதிக்காக காத்திருக்கிறோம். நவீன கணினி வழிக் கல்வி, யோகாசனம் மற்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செயதுள்ளோம். எங்கள் இலக்கு நிறைவேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி கூறும்போது, “அந்தப் பள்ளியில் படித்தவன் நான். ஆரம்பக் கல்வியை தொடங்கி, ஆசிரியராக உயர்ந்து நிற்கிறேன். அதற்கு அடித்தளமிட்டது, நான் படித்த இந்தப் பள்ளியாகும். அந்த பள்ளிக்கு இடம் தேவைப்படுகிறது என்பதை அறிந்தேன். சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்தில், எனது 20 சென்ட் நிலத்தை எழுதித் கொடுத்துள்ளேன் ” என்றார்.

வருவாய் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கும் இந்த காலத்தில், ஏழை மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிக்காக 30 லட்சம் மதிப்புள்ள தனது நிலத்தை தானமாக கொடுத்த தலைமை ஆசிரியர் கோவிந்தசாமியின் நடவடிக்கையை அனைத்துத் தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x