

'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பின் சார்பில், 'I 4 India' என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வோர் ஆண்டும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் போட்டி நடைபெறுகிறது.
இதில் திறமையும், ஆர்வமும் கொண்ட மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.