

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்த ரசன் திருச்சியில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
‘இந்தியாவை மீட்போம். தமிழகத்தை காப்போம்’ என்ற முழக்கத்துடன் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் ஜுன் 29-ம் தேதி கன்னியாகுமரி, விருதுநகர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கடலூர் ஆகிய 6 இடங்களில் இருந்து தொடங் கப்பட உள்ளது.
நீட் தேர்வில் தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப் பாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. நதிநீர் விவகாரங் களிலும் தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. ஆனால், தமிழக அரசு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.
அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பதவிச் சண்டையை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்வதால், தமிழகத்தின் உரிமைகள் பறிபோகின்றன. பொறுப் பற்ற ஆட்சி இங்கு நடக்கிறது. நெடுவாசல் போலவே, கதிராமங்க லத்திலும் தற்போது போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நிலத்தி லிருந்து எண்ணெய் எடுப்பதை ஆட்சேபிக்கவில்லை.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சிப்பதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஸ்டாலின் கூறுகிறார். கோமா நிலையில் உள்ள இந்த ஆட்சியை கலைக்க வேண்டியதில்லை, தானாகவே முடிந்துவிடும். பாஜகவுக்கு சலாம் போடும்வரை இந்த ஆட்சி நீடிக்கும் என்றார்.