

சென்னை நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கத்தின் பெயரை மாற்றினால் போராட்டம் வெடிக்கும் என்று திக தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (நிஃப்ட்) என்னும் மத்திய அரசு நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த கல்வி நிறுவனத்தின் அரங்கம் பல ஆண்டு காலமாக ‘திருவள்ளுவர்’ பெயரில் இயங்கி வந்தது. இந்த சூழலில், அந்தப்பெயரை மாற்றி வேறு பெயர் சூட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த விஷமத்தனமான வேலையில் யார் ஈடுபட்டாலும் போராட்டம் வெடிக்கும்'' என்று வீரமணி கூறியுள்ளார்.