

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வளாகத் தில் உள்ள யோக நரசிம்மர் சன்னதிகும் பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பாலாலயம் செய்யப்பட்டது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயில் கும்பாபிஷேகம் 2004-ல் நடத்தப்பட்டு, 12 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. பார்த்தசாரதி பெருமாள் கோயி லில் யோக நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது. இது மட்டுமின்றி, வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ் வார், குளக்கரை ஆஞ்சநேயர் சன்னதிகளுக்கும், அதன் விமானங்களுக்கும், பின் கோபுர வாசல் விமானம், பாண்டி கோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம், நரசிம் மர் மண்டபத்தின் மேல்தளம், கீழ்தளங்கள் ஆகிய வற்றுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
12 ஆண்டுகள் நிறைவடைந் ததை தொடர்ந்து, முதல்வர் உத்தரவின்பேரில் இந்த சன்னதிகளுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
இதையொட்டி, கோயிலில் நேற்று காலை 6.15 மணி முதல் 7.15 மணிக்குள் பாலாலயம் செய்யப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அரசு செயலாளர் டி.கே.ராஜேந்திரன், ஆணையர் மா.வீர சண்முகமணி, கூடுதல் ஆணையர் மா.கவிதா, இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி, பார்த்தசாரதி கோயில் செயல் அலுவலர் மு.ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாலாலயத்தைத் தொடர்ந்து பஞ்சவர்ண பூச்சு, பழமை மாறாத வகையில் சுவர்களுக்கு மூலிகை பூச்சும் பூசப்பட உள் ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் கூறினர்.