

திருவண்ணாமலையில் நடந்த ராணுவப் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாமில் பங்கேற்ற இளைஞர் களுக்குப் போலி சான்றிதழ்களை வழங்கிய இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ராணுவப் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் திருவண் ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. உடற்தகுதி தேர்வில் போலி இருப்பிடச் சான்றிதழ்களை 108 பேரும், போலி கல்விச் சான்றிதழ்களை 2 பேரும் கொடுத்து பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து, 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் திரு வண்ணாமலை, வேலூர், விழுப் புரம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வசிக்கும் 11 இடைத்தரகர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், போலி சான்றிதழ் களை வழங்கியதாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் கொழுந்திராம்பட்டு கிராமத்தில் வசிக்கும் பாக்கியராஜ்(49) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.