

பிரபல தொழில் அதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நினைவிடத்தில் `தி இந்து’ குழும சேர்மன் என்.ராம் நேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பிரபல தொழிலதிபரும், காந்தியவாதியுமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் காலமானார். அவரது உடல் பொள்ளாச்சியில் உள்ள என்.ஐ.ஏ. கல்விக் குழும வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நினைவிடத்தில் தீப ஒளி வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் கேரள மாநில ஆளுநரும், உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான சதாசிவம், ஆனைகட்டி ஸ்ரீலஸ்ரீ மடம் தயானந்த சரஸ்வதி சுவாமிகள், `தி இந்து’ குழும சேர்மன் என்.ராம், பேரூர் சாந்தலிங்க அடிகளார், இளைய பட்டம் மருதாசல அடிகளார், ஊரான் அடிகளார் , பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் குடும்பத்தினர், உறவினர்கள், முக்கியப் பிரமுகர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.