அமைச்சராக இருந்தவர் கவுன்சிலர் பதவிக்கு போட்டி

அமைச்சராக இருந்தவர் கவுன்சிலர் பதவிக்கு போட்டி
Updated on
1 min read

திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டில் முன்னாள் வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற்றால் மேயர் பதவிக்கு முன்னிலைப்படுத்துவார் எனத் தெரிகிறது.

திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சிக்கு ‘சீட்’ கிடைக்க வில்லை. கட்சியினர் மத்தியில் அதிருப்தி, மக்களிடம் பாராமுகம், அடிப்படை வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்தாமல் இருந்தது உட்பட பல்வேறு விவரங்களை புகாராக கூறுகின்றனர் கட்சியின் சீனியர்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரச்சாரத்துக்கு சென்ற அவரை, அடிப்படை வசதி கள் கோரி அதிமுகவினரே முற்றுகையிட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. ஆனால், அதன்பின்ன ரும் கட்சியினர் மற்றும் பொது மக்களிடம் இருந்து அவர் விலகி இருந்ததே, வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

வாய்ப்பு இழந்தவர்கள்

மேயர் அ.விசாலாட்சி, 4-ம் மண்டலத் தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் உட்பட 10-க்கும் மேற்பட்ட தற்போதைய கவுன்சிலர் களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் கவுன்சிலர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இன்று மனு தாக்கல்

அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும், சம்பந்தப்பட்ட இடங்களில் இன்று (செப்.27) பகல் 12 முதல் 1 மணிக் குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in