

சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் 66-வது முறையாக 14-வது நுழைவு வாயில் பகுதியில் இருந்த கண்ணாடி உடைந்து விழுந்தது. யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் கண்ணாடி உடைந்து விழுந்தது பற்றி விசாரணை நடத்தினர். அதன் பின் ஊழியர்கள், உடைந்த கண்ணாடிகளை அப்புறப்படுத்தினர்.