

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் 63-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி திமுக எம்.பி.க்கள் நெப்போலியன், கே.பி.ராமலிங்கம், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நெப்போலியன், "நான் இங்கு இல்லாத போது சில கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. எப்போதும் அழகிரிக்கு துணை நிற்பேன்" என்றார்.
தென் மாவட்டத்தில் திமுக-வை வலுப்படுத்த அழகிரி பெரும் பங்காற்றி இருப்பதாக எம்.பி.ரித்தீஷ் கூறினார்.
தேமுதிக கூட்டணி கூடாது:
"தேமுதிக-வுடன் திமுக கூட்டணி சேரக் கூடாது. திமுகவுக்கு என தனி மரியாதை, அடையாளம் இருக்கிறது, அதை தேமுதிகவுடன் இணைந்து இழப்பதை விட தேர்தல் தோல்வியை எதிர்கொள்ளலாம்" என மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தெரிவித்துள்ளார்.
அழகிரி பிறந்தநாளை ஒட்டி, மதுரையில் அவரது ஆதரவாளர்கள் பல விதமான போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.