மூளைச்சாவு ஏற்பட்டவர் கிட்னி தானம்

மூளைச்சாவு ஏற்பட்டவர் கிட்னி தானம்
Updated on
1 min read

ஈரோட்டில் தனியார் மருத்துவ மனையில் மூளைச்சாவு ஏற்பட்டவரின் சிறுநீரகப் பை (கிட்னி), பெண்ணுக்கு தானமாக வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (57). இவர் ஆலங்குளத்தில் உள்ள சிமென்ட் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். கடந்த செப்டம்பர் 30ம் தேதி, நாமக்கல்லில் உள்ள நண்பரை பார்க்க சுகுமார் வந்திருந்தார். நேற்று இரவு அவர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, வாகனம் மோதியதில், தலையில் பலத்த காயம் அடைந்து, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படார்.

சுகுமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள், குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து, சுகுமாரின் மனைவி ஜானகி மற்றும் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர். அதே மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணுக்கு, சுகுமாரின் ஒரு சிறுநீரகம் பொருத்தப்பட்டது. மற்றொரு சீறுநீரகம், கல்லீரல் ஆகியன கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in