

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் நேற்று ஆய் வுக்கு வந்த எண்ணெய் நிறுவன அலுவலர்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டைக்காடு, வடகாடு, வாணக் கன்காடு, நல்லாண்டார்கொல்லை, கருக்காகுறிச்சி, கறம்பக்குடி உள்ளிட்ட இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து எரிபொருள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல் படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டதால், அதை எதிர்த்து நெடுவாசலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். இந்நிலையில், கோட்டைக் காட்டில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு, ஒரு எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்த அலுவலர்கள் 5 பேர் நேற்று ஆய்வுக்காக வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள், அந்த அலுவலர்களை சிறைபிடித்தனர்.
கறம்பக்குடி வட்டாட்சியர் யோகேஸ்வரன், ஆலங்குடி டிஎஸ்பி அப்துல் முத்தலிபு ஆகியோர் அங்கு சென்று அந்த அலுவலர்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சார் ஆட்சியர் அம்ரித் கூறும்போது, “எரிபொருள் சோதனை மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் பரா மரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஆந்திராவைச் சேர்ந்த தனி யார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. அதன் ஊழியர்கள் கோட்டைக்காட்டில் எரிபொருள் சோதனை நடைபெற்ற இடத்தில் எண்ணெய் கசிவு இருக்கிறதா என ஆய்வு செய்ய வந்துள்ளனர்.
இத்திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் எந்தப் பணிகளையும் மேற் கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப் பட்டது. இதை ஏற்று அவர்கள் திரும் பிச் சென்றுவிட்டனர்” என்றார்.