

'மே 17' இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை மாநகர காவல்துறை இந்த நடவடிக்கைகையை எடுத்துள்ளது.
திருமுருகன் காந்தி மீது மத்திய அரசு அலுவலகத்தைத் தாக்கியது உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
திருமுருகன் காந்தியுடன் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்ததுள்ளது.
கடந்த 21-ம் தேதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்து நடத்தினார். மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருக்கும் நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது அவர்கள் 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
திருமாவளவன் கண்டனம்:
இதற்கிடையில், திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.