Published : 09 Jul 2016 09:28 AM
Last Updated : 09 Jul 2016 09:28 AM

கூடங்குளம் 2-வது உலையில் 48 மணி நேரத்தில் மின் உற்பத்தி

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்குவதற்கு முந்தைய ஏற்பாடுகள் நேற்று இரவு தொடங்கின.

அடுத்த 48 மணி நேரத்தில் `கிரிட்டி காலிட்டி’ எனப்படும் அணுப்பிளவு தொடர்வினை தொடங்கு கிறது.

கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது. 2-வது உலையிலும் மின் உற்பத்திக்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்து உள்ளன. மின் உற்பத்தி தொடங்குவதற்கான தொழில்நுட்ப அனுமதியை கடந்த 27-ம் தேதி இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அளித்தது.

இதையடுத்து 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்குவதற்கு ஏதுவாக அணுப்பிளவு தொடர்வினைக்கான ஏற்பாடுகள் நேற்று இரவு 7.52-க்கு தொடங்கின. அடுத்த 48 மணி நேரத்தில் அணுப்பிளவு தொடர்வினையும், மின் உற்பத்தியும் தொடங்கும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x