

பொதிகை தொலைக்காட்சியில் வாரம்தோறும் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு இசைமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்த ‘குறை யொன்றுமில்லை’ என்ற வரலாற்று நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ‘தி இந்து’ நாளிதழுடன் இணைந்து பொதிகை தொலைக்காட்சி இந்நிகழ்ச்சியை வழங்குகிறது.
அந்த வரிசையில் இன்று ஒளிபரப்பாகவிருக்கும் 46 - வது அத்தியாயத்தில் ஸ்ரீவெங்கடேச பெருமாளை துயில் எழுப்ப எம்.எஸ்.சுப்புலட்சுமி 1963 ல் பாடிய ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதம், பஜகோவிந்தம். ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம் ஆகியவை பதிவு செய்யப்பட்டபோது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும், இன்னபிற இசைப் பதிவுகளையும் சேர்த்து சில சுவையான தகவல்களுடன் எச்.எம்.வி.ரகு பகிர்ந்துகொள்கிறார்.
பல்துறைக் கலைஞர்களின் பங்களிப்போடு இடம்பெறும் இந்த நிகழ்ச்சியில் பாவயாமி ரகு ராமம் மற்றும் ஸ்ரீரெங்க புர விகார பாடல்களில் இருந்து சில துளிகளும் இடம்பெறும். இந்த அத்தியாயத்தின் மறுஒளிபரப்பு செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.