

தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளை மத்திய. மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி தமாகா இளைஞர் அணி சார்பில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக தமாகா வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, மீனவர்களின் வாழ்வாதாரம் போன்றவற்றிற்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு காலக்கெடுவிற்குள் நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்.
இதனை வலியுறுத்தி தமாகா இளைஞர் அணி சார்பில் வருகின்ற 3 ஆம் தேதி காலை 10.00 மணி அளவில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் அவர்கள், மூத்த துணைத் தலைவர், துணைத் தலைவர்கள், மாநில இளைஞர் அணியின் தலைவர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் சென்னை மற்றும் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், பகுதி தலைவர்கள், வட்ட தலைவர்கள், தொண்டர்கள், மற்றும் இளைஞர் அணியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொது மக்கள் ஆகியோர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.