

சென்னை உயர் நீதிமன்றத் தில் திரைப்படத் தயாரிப்பாள ரான கே.ராஜன் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு டெபாசிட் கட்டணத்தை அதிகபட் சமாக நிர்ணயித்துள்ளனர். இது சட்டவிரோதம். எனவே இந்த தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இதேபோல மேலும் சில தயாரிப்பாளர்களும் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி கே.கல்யாண சுந்தரம் முன்பு நேற்று நடந்தது. அப்போது நீதிபதி, “திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனை தேர்தல் அதிகாரியாக நியமிக்கிறேன். அவர் சங்க விதிகளுக்கு உட்பட்டு தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் அறிவிப்பு தொடர்பான விவரங்களை 21 நாட்களுக்கு முன்பாக முறைப்படி அறிவிக்க வேண்டும். நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனுக்கு ஊதிய மாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.