Published : 27 Mar 2017 08:33 AM
Last Updated : 27 Mar 2017 08:33 AM

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் நெடுவாசலில் மீண்டும் போராட்டம்: கிராம மக்கள் அறிவிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என நெடுவாசல் மக்கள் அறிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளதாக மத்திய அரசு கடந்த பிப்.15-ம் தேதி அறிவித்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரி வித்து பிப். 16-ம் தேதி முதல் நெடுவாசலில் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளின்படி மார்ச் 9-ம் தேதி நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய, மாநில அரசுகள் நம்பிக்கை தெரிவித்ததால் மார்ச் 24-ம் தேதி நல்லாண்டார்கொல்லையிலும், 25-ம் தேதி வடகாட்டிலும் மக்கள் தங்களது தொடர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நெடுவாசல், புதுச்சேரியில் காரைக் கால் உட்பட நாட்டில் 31 இடங் களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு விடப்பட்ட ஏலத்துக்கான ஒப்பந்தம் டெல்லி யில் தாஜ் மான்சிங் எனும் நட்சத்திர ஹோட்டலில் இன்று (மார்ச் 27) கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் நெடுவாசல் மட்டுமின்றி, புதுக் கோட்டை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் அளித்த உத்தரவாதத்தின்படி, இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதையும் மீறி, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கையெழுத் திடப்பட்டால், மீண்டும் போராட் டத்தை தொடங்குவோம் என நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போராட்டக் குழு வினர் கூறும்போது, “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தி னால் நிலத்தடி நீர் மட்டம் குறை யும். அதனால் விவசாயம், குடிநீர் பாதிக்கும். சுற்றுச்சூழலும் பாதிக் கும். எனவே இத்திட்டம் வேண்டாம் என அமைச்சரிடம் தெரிவித்தோம். மனுவாகவும் அளித்தோம்.

அப்போது, ‘கோரிக்கை மனுவை மாநில அரசுக்கும், மத்திய சுற்றுச்சூழல் துறைக்கும் அனுப்பி வைக்கிறோம். மாநில அரசு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்திட்டத்தை செயல் படுத்த முடியாது. மக்களின் விருப் பத்துக்கு எதிராகவும், மாநில அரசு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமலும், இத்திட் டத்தை செயல்படுத்த முடியாது’ என்று மத்திய அமைச்சர் தெரி வித்திருந்தார்.

தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது மிகவும் வேதனையாகவும், அதிர்ச் சியாகவும் உள்ளது. அவ்வாறு நடந்தால், நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களை திரட்டி மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவோம். இந்த திட்டம் ரத்தாகும் வரை தொடருவோம்” என்றனர்.

இதுகுறித்து வடகாடு போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த டி. ராஜகுமாரன் கூறும் போது, “நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக ரூ.12 லட்சத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யருக்கு அனுப்பி உள்ளது. இதை ஆட்சியர் உடனே திருப்பி அனுப்ப வேண்டும். மத்திய அரசு ஒப்பந்தம் விடப்பட்ட பட்டியலில் இருந்து நெடுவாசலை நீக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x