வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் ஏன்? - வங்கி அதிகாரி தாமஸ் பிராங்கோ விளக்கம்

வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் ஏன்? - வங்கி அதிகாரி தாமஸ் பிராங்கோ விளக்கம்
Updated on
2 min read

வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கான காரணங்கள் குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் தாமஸ் பிராங்கோ விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று ‘தி இந்து’விடம் கூறியதாவது:

வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட 9 சங்கங்கள் பங்கேற் கின்றன.

கடந்த 1969-ம் ஆண்டு வங்கிகள் நாட்டுடமையாக்கப் பட்டதில் இருந்து நாட்டின் பொருளாதார சீ்ர்திருத்தங்க ளுக்கு வங்கிகள் உதவி செய்து வருகின்றன. குறிப்பாக, மத்தி யில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு 25 ஆயிரம் ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டன. முத்ரா கடன்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக வழங்கப்பட்டன.

அத்துடன், அனைத்து அரசு திட்டங்களை நிறைவேற்ற வங்கிகள் துணை நின்றன. இதற்கெல்லாம் மேலாக பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளி யானதையடுத்து மக்கள் பண மின்றி தவித்தனர். இப்பிரச்சி னையில் வங்கிகள்தான் அரசை காப்பாற்றின.

ஆனால், அரசுக்கு இவ்வளவு உதவியாக இருந்து வங்கி ஊழியர்களுக்கு அரசு எவ்வித நன்மையும் செய்யவில்லை. குறிப்பாக, 25 கோடி புதிய ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கியது, ஆதார் அட்டை இணைப்பு, ரூபே அட்டைகள் வழங்கியது ஆகியவற்றுக்காக வங்கிகளுக்கு பெருத்த செலவு ஏற்பட்டுள்ளது. இந்த செலவை ஈடுகட்ட அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனம் வழங்க வேண்டும்.

மேலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக ஏற்பட் டுள்ள வேலைப்பளு காரணமாக பொதுமக்களுக்கு கடன்களை வழங்க முடியவில்லை. அத்துடன், ஏற்கெனவே வழங்கப்பட்ட கடன்களையும் வசூலிக்க முடியவில்லை. வங்கி ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான பணிக்கொடை வழங்க வேண்டும். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் முத்ரா கடன் தொகை ரூ.10 லட்சம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஊழியர் பற்றாக்குறையால் திணறி வரும் வங்கிகளில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மேலும் பணி நெருக்கடி ஏற்படும். எனவே வங்கிகளில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை முன்கூட்டியே தொடங்கப்பட வேண்டும். தொழி லாளிகளுக்கு ஆதரவாக இல் லாமல், உரிமையாளர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்கங்களின் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர முயற்சிக்கிறது.

தொழிற்சங்கங்களின் உரி மைகளை நசுக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. வங்கிப் பணிகளை அயல் பணி மூலம் செய்யக் கூடாது. அதேபோல், ஐடி நிறுவனங்கள் வாரத்துக்கு 5 நாட்கள் செயல் படுவது போல் வங்கிகளும் 5 நாட்கள் செயல்பட வேண்டும். இதை மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் நாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட முடிவு செய்துள் ளோம்.

இவ்வாறு தாமஸ் பிராங்கோ கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in