சேலம் இரும்பாலையை விற்பதற்கு தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி
சேலம் இரும்பாலையை தனி யாருக்கு தாரை வார்க்க தமிழக அரசு அனுமதிக்காது என சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று இதுதொடர்பாக நடைபெற்ற விவாதம்:
சேலம் இரும்பாலையை தனி யாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். 4 ஆயிரம் ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த ஆலை வளாகத்தில் தொழில் பூங்கா அமைக்கலாம்.
கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்க திட்டமிட்டபோது அதை தமிழக அரசே வாங்கியது. எனவே, சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்க தமிழக அரசு அனுமதிக்காது. அதற்கான தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.
தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்:
மத்திய அரசுக்கு அழுத்தம் தர..
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:
அண்ணாவின் கனவான சேலம் இரும்பாலை திமுக தலைவர் கருணாநிதியின் தீவிர முயற்சியில் கொண்டு வரப்பட்டது. அதன் தொடக்க விழாவில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பங்கேற்றார். இந்த இரும்பாலை தனியாருக்கு விற்கப்படுவதை தடுக்க தமிழக அரசு பெரும் கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும். இதற்காக ராஜினாமா செய்வோம் என்று கூட தமிழக அரசு மிரட்ட வேண் டும். இந்தப் போராட்டத் துக்கு திமுக உறுதுணையாக இருக்கும்.
மின்துறை அமைச்சர் பி.தங்க மணி: சேலம் இரும்பாலைக்காக தமிழக அரசு ராஜினாமா செய்வதாக மிரட்ட வேண்டும் என்று துரைமுருகன் குறிப்பிட்டார். அகிம்சை போராட்டம் மூலமே அதிமுக அரசு கோரிக்கைகளை வென்றெடுக்கும். நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டபோது மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என்றுகூட சொல்லவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
