காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை தவிர்ப்பது ஏன்? - முதல்வருக்கு ஜி.கே.வாசன் கேள்வி

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை தவிர்ப்பது ஏன்? - முதல்வருக்கு ஜி.கே.வாசன் கேள்வி
Updated on
1 min read

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாமல் முதல்வர் ஜெயலலிதா தவிர்ப்பது ஏன் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள் ளார்.

சேலத்தில் தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 80 நாட்களாக மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செய்து, உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தி வருகிறேன். பிரேசில் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக இளைஞர் மாரியப்பனுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். தமாகா சார்பில் அவருக்கு ரூ.50 ஆயிரம் வழங் கப்படும். சேலத்திலேயே அவர் பயிற்சி பெறும் வகையில் தமிழக அரசு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மை வாரி யத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக் குள் அமைப்பதை பிரதமர் இனியும் தட்டிக்கழிக்கக் கூடாது. காவிரி, சிறுவாணி பிரச்சினைகளில் முதல் வர் கடிதம் எழுதுவது, நீதிமன் றத்தை அணுகுவது போன்ற வற்றை செய்வது கடமையாக இருந்தாலும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாமல் அவர் தவிர்ப்பது ஏன்?

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக, புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறை இனியும் மெத்தனமாக இருக்கக் கூடாது என்றார்.

திருமாவளவன் வலியுறுத்தல்

காவிரி நீர் பிரச்சினையில், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, ஒருமித்த கருத் தோடு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி யுள்ளார்.

கோவையில் நேற்று செய்தி யாளர்களிடம் பேசும்போது, பல் வேறு பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் தென் மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திர மாநில முதல் வர்களை பிரதமர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நதிநீர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வு ஏற்பட வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டி, ஒருமித்த கருத்தோடு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in