

ஈரோடு புத்தகத் திருவிழா இன்று நிறைவடைகிறது. நிறைவு விழாவில் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பாளருக்கு ஜி.டி.நாயுடு விருதினை இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வழங்கு கிறார்.
‘மக்கள் சிந்தனைப் பேரவை’ சார்பில் ஈரோடு வ.உ.சி பூங்காவில் கடந்த 5-ம் தேதி முதல் ஈரோடு புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான புத்தங்களை வாங்கிச் சென்றனர்.
ஈரோடு புத்தகத் திருவிழாவின் இந்த ஆண்டு சிறப்பம்சமாக, ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ சார்பில் தமிழகத்தின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பாளரை ஊக்குவிக்கும் வகையில், ‘அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது’ அறிவிக்கப் பட்டது.
இந்த விருதுக்காக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கண்டு பிடிப்புகள் குறித்து விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பங்கள் முன்னாள் துணைவேந்தர் பொன்னு சாமி தலைமையிலான அறிவியல் அறிஞர் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட் டன.
இக்குழுவினரின் பரிந்துரையின் படி விருது பெறுபவர் குறித்த அறிவிப்பு இன்று மாலை நடக்கும் நிறைவு விழாவில் அறிவிக்கப்படு கிறது. இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை இந்த விருதை விழாவில் வழங்கவுள்ளார்.