விவசாயிகள் தற்கொலை குறித்த அரசு நிலைப்பாட்டுக்கு கம்யூ. கண்டனம்

விவசாயிகள் தற்கொலை குறித்த அரசு நிலைப்பாட்டுக்கு கம்யூ. கண்டனம்
Updated on
1 min read

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தவறான தகவல் அளித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று அறிவித்து, நிலவரியை முழுமை யாக தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஆனால் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது மிகுந்த கவலை அளிப்பதுடன், கண்டனத்திற்குரியது.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது 17 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளதை ஏற்றுக் கொண்டார். மேலும் விவசாயிகள் தற்கொலை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போது முதல்வராக உள்ள கே.பழனிச்சாமி உயிரிழந்த 82 விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகின் றார். தற்கொலையே நடக்க வில்லை என்று ஒருபுறமும், 82 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று மறுபுறமும் கூறுவது முரண்பாடாக உள்ளது. தங்களது ஆட்சியில் தற்கொலை என்பதனை ஏற்றுக் கொண்டால், தங்களின் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள கவுரவ குறைச்சல் என்பதாக ஆட்சியாளர்கள் கருதுகின்றார்கள் போலும்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் கொடூரத்தை மத்திய அரசுக்கு உரிய முறையில் எடுத்துரைத்து, தமிழகம் கோரி யுள்ள நிதியினைப் பெற்றிட மாநில அரசு முன்வர வேண்டும். தமிழக விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்திட வேண்டாமென தமிழக அரசைக் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in