9-ம் வகுப்பில் 42 பேர் தோல்வி: சிபிஎஸ்இ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

9-ம் வகுப்பில் 42 பேர் தோல்வி: சிபிஎஸ்இ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்த 42 மாணவர்கள் 9-ம் வகுப்பு இறுதித் தேர்வில் தோல்வியடைந் ததாக அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுக்கு 2 வாரத் தில் பதிலளிக்க மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ’12-ம் வகுப்பு வரை எந்த மாணவரையும், எந்த வகுப் பிலும் தோல்வியடையச் செய்யக் கூடாது என ஏற்கெனவே சிபிஎஸ்இ நிர்வாகம் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. ஆனால், அதையும் மீறி சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகன் ஆதித்யா உள்ளிட்ட 42 பேரை பள்ளி நிர்வாகம் இறுதித் தேர்வில் தோல்வியடையச் செய்துள்ளது. எனவே, அவர்களுக்கு வேறு பள்ளியில் மறுதேர்வு நடத்த வேண்டும். மேலும் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக் கறிஞர், ‘‘குறிப்பிட்ட பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த 35 சதவீத மாணவர்கள் இறுதியாண்டு தேர்வில் தோல்வி அடைந்துள்ள னர். அவர்களின் உண்மையான கல்வித் தகுதியை கண்டறிய, வேறு பள்ளியில் மறுதேர்வு நடத்த வேண்டும். அதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும்’’ என வாதிட்டார். இந்த மனுவுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு சிபிஎஸ்இ மற்றும் பள்ளி நிர்வாகத் துக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in