தமிழ் புத்தாண்டில் நகை வாங்க மக்கள் ஆர்வம்: தங்கம் விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு

தமிழ் புத்தாண்டில் நகை வாங்க மக்கள் ஆர்வம்: தங்கம் விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு
Updated on
1 min read

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் ஆர்வமாக நகை வாங்கியதால், வழக்கத்தை விட நேற்று 20 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

புத்தாண்டில் நகை வாங்கி னால் அந்த ஆண்டு முழுவதும் குடும்பத்தில் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அந்த வகையில், தமிழ் புத்தாண்டு நாளான நேற்று காலையில் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்த மக்களில் சிலர் அருகில் இருந்த நகை கடைகளுக்குச் சென்று நகை வாங்கினர். பொதுமக்களை கவரும் வகையில் நகைக் கடைகளில் பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

இதனால், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருக்கும் நகைக் கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னையில் தியாகராயர் நகர், மயிலாப்பூர், பிராட்வே, புரசைவாக்கம், தாம்பரம், அடையார், கதீட்ரல் சாலை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறுகையில், ‘‘தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் மாலை முதலே நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், வழக்கத்தை விட 20 சதவீதம் விற்பனை அதிகமாக இருந்தது. மேலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வங்கி அட்டைகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்தனர்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in