

தமிழகத்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தலைமைச் செயலகத் தில் முதல்வர் ஜெயலலிதாவை வெள்ளிக்கிழமை (நேற்று) சந்தித் துப் பேசினார். அப்போது குளச்சலில் (ஏனயம்) அமைக்கப்படவிருக்கிற துறைமுகத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புக்கான ஆய்வுப் பணிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த துறைமுகம் ஏனயத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்படுவதால் அப்பகுதி எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும், கடல் பகுதியில்தான் துறை முகம் அமைக்கப்படும். எனவே, அங்கு இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் நேராது என்றும் எடுத்துரைத்தார்.
அதற்கு முதல்வர், குளச்சலில் துறைமுகம் அமைக்க வேண்டும் என்றுதான் தமிழகத்தின் முதல்வ ராக தாம் பொறுப்பேற்ற காலம் முதல் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார். குளச்சல் துறைமுக திட்டத்துக்கு தேவை யான ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கும் என்று முதல்வர் உறுதியளித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு தேவை யான நிலத்தை ஒதுக்கீடு செய்யு மாறு மத்திய அமைச்சர் முதல் வரை கேட்டுக்கொண்டார். இந்த திட்டம் விரைவுபடுத்தப்படும் என்று முதல்வர் உறுதி கூறினார்.
புதுச்சேரியின் தென் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையை மேம்படுத்த வேண்டி யுள்ளது. எனவே, அந்த சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்குமாறு மத்திய அமைச்சர் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தார். அப் போது, தேசிய நெடுஞ்சாலைக் காக ஏற்கெனவே எடுத்துக்கொள் ளப்பட்ட சாலைகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரா மரிப்பு நிதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சுட்டிக் காட்டிய முதல்வர், தமிழக அரசு கிழக்கு கடற்கரைச் சாலையில் தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னி யாகுமரி சாலையை தரம் உயர்த்தி மேம்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு, தமிழக அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கும் என்று முதல்வர் உறுதியளித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.