தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும்
Updated on
1 min read

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம், ''தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக, ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒருசில இடங்களில் பெய்யக்கூடும்.

வெப்பநிலையைப்பொறுத்தவரை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்'' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in