சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு கட்டண ரயில்

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு கட்டண ரயில்
Updated on
1 min read

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூரில் இருந்து வரும் 3-ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82603) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இதேபோல், மறு மார்க்கத்தில் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு எழும்பூர் வரும்.

சென்னை எழும்பூரில் இருந்து வரும் 5-ம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (06001) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். அங்கிருந்து 6-ம் தேதிமாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

நாகர்கோவிலில் இருந்து வரும் 4, 11-ம் தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில்கள் (06023) மறுநாள் காலை 8 மணிக்கு கிருஷ்ணராஜபுரத்தை சென்றடையும். திருச்சியிலிருந்து 3-ம் தேதி மாலை 3.25 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (06026) அன்றைய தினம் இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். சென்னை எழும்பூரில் இருந்து வரும் 7-ம் தேதி காலை 8.30 மணிக்கு புறப்படும் ரயில் (06025) மதியம் 2 மணிக்கு திருச்சியை சென்றடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in