

தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் அசோக் டோங்ரே, அனிதா பிரவீண், சுதீப் ஜெயின் ஆகியோர் மத்திய அரசு பணிக்கு செல்வதால், அவர்களை தமிழக அரசு விடுவித்துள்ளது.
இதுகுறித்த தமிழக தலைமை செயலர் கு.ஞானதேசிகன் அறிவிப்பு:
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக இருந்த அசோக் டோங்ரே, பாதுகாப்பு அமைச்சக இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை (பயிற்சி)பிரிவு முதன்மை செயலராக இருந்த அனிதா பிரவீண், மத் திய வர்த்தகத்துறை இணை செய லராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்சார மேம் பாட்டு முகமை (டெடா) மேலாண் இயக்குநர் மற்றும் தலைவராக இருந்த சுதீப் ஜெயின், இந்திய தேர்தல் ஆணைய பயிற்சிப்பிரிவு இயக்குநர் ஜெனரலாக நிய மிக்கப்பட்டுள்ளார்.