

இன்று (ஜூன் 15) உலக மூத்த குடிமக்கள் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்
மக்கள் தொகையில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நம்மை மகிழ்ச்சி அடையச் செய்தாலும், வயது நிமித்தமாக ஏற்படும் அவர்களின் இயலாமை மற்றும் பராமரிப்பு இல்லாமல் உறவுகளால் புறக்கணிக்கப்படுவது கவலை அளிக்கச் செய்கிறது. முதியோர்களை தனிமைப்படுத்தாமல், அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு பாதுகாப்பான, கவுரவமிக்க வாழ்க்கையை இளைய தலைமுறை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம்.
உறவுகளால் கைவிடப்பட்ட முதியோர், சாலைகள், பஸ் நிலைய ங்கள், ரயில் நிலையங்களில் தூங்க இடமில்லாமலும், உடுக்க உடையில்லாமலும் வெயில், மழையில் தவித்து வருகின்றனர். இவர்களுக்கான முதியோர் இல்லங்கள் போதிய அளவில் இல்லாததால், அவர்களது வா ழ்க்கை சாலையிலேயே கடந்து சாலையிலேயே முடிகிறது. உறவுகள் இருந்தாலும் பெரு ம்பாலான முதியோர் கூண்டுக்குள் சிக்கிய பறவைகளாக மனரீ தியாகவும், பொருளாதார ரீதி யாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ஆர்.காந்தி கூறியதாவது: நவீன மருத்துவ வசதிகள் வந்துவிட்டதால் தனிப்பட்ட மனிதனின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
2050-ம் ஆண்டில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 14 சதவீதமாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பெருகும் மக்கள்தொகை, உடைந்துபோன கூட்டுக் குடும்ப வாழ்க்கை, பொருளாதாரப் பற்றாக்குறை மற்றும் மேல்நாட்டு கலாச்சாரத்தால் இந்த தலைமுறையினருக்கு முதியோர்களின் மதிப்பும், பெருமையும் தெரியாமல் போய்விட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சரத்து 41-ல் ஆதரவற்ற முதியோர்களைக் கவனிப்பது மற்றும் பராமரிப்பது அரசின் கடமையாகச் சொல்லப்பட்டுள்ளது. நீதிமன்ற தலையீடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளை ஏற்று, 2007-ல் பெற்றோர், மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்புச் சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது.
இந்தச் சட்டத்தின் நோக்கம், புறக்கணிக்கப்படும் வயதா னவர்களுக்கு உரிய பாதுகாப்பு, மருத்துவ வசதியை உறுதி செய்ய வேண்டும். வாரிசுகளால் கைவி டப்பட்ட பெற்றோரது பராமரிப்பு, வாழ்க்கை பொருளு தவி மற்றும் இருப்பிட உதவியை சட்டரீதியாக வாரிசுகளிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும். வயதானவர்களின் வாரிசு உரிமையாகும் உறவினர்களும் அவர்களை பராமரிப்பதை இந்தச் சட்டம் கடமையாக்கி உள்ளது. மேலும், குழந்தைகள் இல்லாத ஆதரவற்ற முதியோர்களுக்கு, மாவட்டங்கள்தோறும் முதியோர் இல்லங்களை உருவாக்கி அரசு பராமரிக்க வழிவகை செய்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், முதியோர்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் கிடைக்க, அவர்களுடைய உயிர் மற்றும் சொத்துகளுக்கு பாதுகாப்பு வழங்க இந்தச் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு, இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கிய விதிகளின் கீழ் மூத்த குடிமக்கள் பராமரிப்பு வழக்கை, அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ. விசாரித்து 90 நாட்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மூத்த குடிமக்களை நல்ல முறையில் பராமரிப்பதாகக் கூறி, அவர்களுடைய சொத்துகளை தானமாகவோ அல்லது பிற வழிகளிலோ ஏமாற்றி பெற்ற பின்னர், அவர்களை பராமரிக்க வாரிசுகள் தவறி இருந்தால் அந்த சொத்துரிமையை ரத்து செய்ய முடியும். அந்த சொத்துகளை முதியோர்கள் வசம் மீண்டும் ஒப்படைக்க, இந்தச் சட்டம் வழிவகை செய்துள்ளது. மூத்த குடிமக்களை, பராமரிக்க வேண்டி யவர்கள், பராமரிக்கத் தவறி, ஆதரவற்றவர்களாக கைவிட்டு சென்றுவிட்டால் அவர்கள் மீது வழக்கு பதியவும், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கச் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர், சமூக நலத்துறை அலு வலர், ஆர்.டி.ஓ. ஆகியோர் முதியோர்களை பாதுகாக்க வேண்டியது கடமை.
ஆனால், இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லை. சட்டம் முழுமையாக அமல் படுத்தப்படாமல் உள்ளது. பல அதிகாரிகளுக்கு, இந்த சட்டத்தின் நோக்கம், முக்கியத்துவம் தெரி யவில்லை.
அதனால், அரசு இந்த சட்டத்தை கையாளுகின்ற அதிகாரிகளுக்கு அவ்வப்போது சட்டத் துறையை சேர்ந்தவர்களை கொண்டு பயிற்சி வழங்க வேண்டும். அப்போதுதான் மூத்த குடிமக்களை பாதுகாக்கும் இந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.