

தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படா மல் இருக்கும் கட்டிடங்கள் மற்றும் நலத்திட்டங்களை ஒரு வாரத்துக்குள் தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவ னர் ராமதாஸ் வலியுறுத்தியுள் ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வராக ஓ.பன் னீர்செல்வம் பதவியேற்று இரு மாதங்கள் நிறைவடைகின்றன. இந்த இரு மாதங்களில் தமி ழகத்தில் மக்கள் நலத் திட் டங்களைத் தொடங்கி வைப்ப தற்கான அரசு நலத்திட்ட தொடக்க விழா ஒன்றுகூட நடத்தப்படவில்லை. அதற்கு முன் 4 மாதங்களாக புதியத் திட்டத் தொடக்க விழாக்கள் நடத்தப்படவில்லை. இதனால் மக்களின் பயன்பாட்டுக்காக நிறைவேற்றி முடிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் தொடங்கப் படாமல், யாருக்கும் பயனின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
புதிய திட்டங்களைத் தொடங்கிவைக்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தயாராக இருப்பதாகவும், ஆனால், அவற்றைத் திறக்கக் கூடாது என்று அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தரப்பில் தடை போடப்பட்டி ருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் தமிழ கத்தின் முதல்வராக சசிகலா பொறுப்பேற்க இருப்பதாக வும், அதுவரை புதிய திட்டங் களை தொடங்கி வைக்கக் கூடாது என்றும் தற் போதைய முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆணையிடப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் புதிய திட்டங்கள் தொடங்கப்படவில்லை என்பதை அரசு அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர்.
தமிழகம் முழுவதும் நிறைவேற்றி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமலிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மற்றும் நலத் திட்டங்களை அரசு ஒரு வாரத் துக்குள் தொடங்க வேண்டும். இல்லா விட்டால் அப்பகுதியில் உள்ள பாமகவினர் அவற்றை திறந்து வைப்பார்கள்.
இவ்வாறு ராமதாஸ் அறிக் கையில் கூறியுள்ளார்.