சதுரகிரி கோயிலில் ஒரே நாளில் 8 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

சதுரகிரி கோயிலில் ஒரே நாளில் 8 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
Updated on
1 min read

சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரி சனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல கடந்த 28-ம் தேதி முதல் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

முதல் நாளான 28-ம் தேதி சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரி சனம் செய்தனர். அன்று மாலை திடீர் மழை காரணமாக காட்டா று களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையிலேயே பாதுகாப் பாக தங்க வைக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை அடிவாரத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

காட்டாறுகளில் தொடர்ந்து வெள்ளம் வந்ததால் பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல 29-ம் தேதி அனுமதிக்கப்படவில்லை. அவர்களில் ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் சதுரகிரி மலையடி வாரத்தில் உள்ள அன்ன தானக் கூடங்களிலும், மாந்தோப்பு களிலும் தங்கி இருந்தனர்.

இவர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல நேற்று காலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகலில் வானம் மேக மூட் டத்துடன் மழை வருவதற்கான அறிகுறி இருந்ததால் மாலை 3 மணி வரை மட்டுமே சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு வந்த பக்தர்கள் பாதுகாப்பு கருதி திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதேபோல் மலையில் இருந்த பக்தர்களும் மாலை 4 மணிக்கு பின்னர் கீழே இறங்க அனுமதிக்கப் படவில்லை. 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதுகாப்பாக மலையி லேயே தங்க வைக்கப்பட்டனர். சதுரகிரியில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனர். அத்துடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட சாதுக்களும் சதுரகிரி மலையில் குவிந்துள்ளனர்.

மாந்தோப்பில் தங்க ரூ.3 ஆயிரம் வாடகை

ஆடி அமாவாசை நாளான வரும் 2-ம் தேதி சதுரகிரி மலைக்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கள் தங்குவதற்காக அடிவாரப் பகுதியில் விடுதிகளோ, மண்டபங்களோ இல்லாததால் வத்திராயிருப்பு விலக்கில் இருந்து வண்டிப்பண்ணை வரை சாலையின் இரு ஓரங்களிலும் உள்ள மாந்தோப்புகளை சிலர் குத்தகைக்கு எடுத்து தரையை சுத்தப்படுத்தி பக்தர்கள் தங்குவதற்காக துணிகளால் அறைகள் போன்று தடுப்புகள் அமைத்துள்ளனர். குடும்பமாகவோ அல்லது ஒரு குழுவாகவோ வரும் பக்தர்கள் இங்கு தங்குவதற்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,500 வரை வசூலிக்கப்படுகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in