

தமிழர்களின் பண்பாட்டைக் காக்க வும், அரசியல் மாற்றத்துக்காகவும் மாணவர்கள் ஓரணியில் ஒன் றிணைய வேண்டும் என மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோ சகர் பொன்ராஜ் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரீன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில், அவர் பேசியது:
சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக மாணவர்கள் மூலம் உலகத் தமிழர்கள் ஓரணியில் திரண்டனர். இதேபோன்று தமிழர்களின் பண் பாட்டைக் காக்கவும், அரசியல் மாற்றத்துக்காகவும் மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும்.
அப்துல் கலாம் சொன்னது போன்று மாணவர்கள் கனவு காண வேண்டும். வருங்காலத்தில் என்னவாக வேண்டும் என விரும்பும் மாணவர்கள், அதற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் இதைச் செய்தால்தான் 2020-ல் இந்தியா வல்லரசு நாடாகி, அப்துல் கலாம் கண்ட கனவு நனவாகும் என்றார்.
முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியர் ஆதிரை வரவேற்றார். முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தினகரன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.