

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் பேசும்போது, “இலங்கை முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் பலியானபோது, தமிழ கத்தில் யார் ஆட்சியில் இருந் தது?” என்று கேள்வி எழுப்பி னார். அப்போது திமுக உறுப்பி னர் சக்கரபாணி எழுந்து, “முள்ளி வாய்க்கால் பற்றி பேசுகிறீர்களே.. இதே அவையில் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று உங்கள் முதல்வர் சொல்ல வில்லையா?” என்றார்.
இதைத் தொடர்ந்து திமுக அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த அமளியால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.