

அச்சிறுப்பாக்கத்தில் இலங்கை யைச் சேர்ந்த சிறார்கள் உட்பட 55 தமிழர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக தகவல் கிடைத் ததைத் தொடர்ந்து, மத்திய உளவுப்பிரிவு போலீஸார் நேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின் றனர். முதலில் 74 பேர் தங்கி யிருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அந்த எண் ணிக்கை 55 என உறுதிப்படுத் தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், அச் சிறுப்பாக்கம் பஜார் வீதியில் இலங்கை யைச் சேர்ந்த 6 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட 55 தமிழர்கள் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கல்வி பயில்வதாக, மத்திய உளவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, மத்திய உளவுப்பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: ‘தி பிரைட்’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்த சிறார் களை அழைத்து வந்து, இப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக, சிறார்கள் இங்கு தங்கியுள்ளனர். மேலும், அவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்று வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களை, சம்பந்தப்பட்ட தனியார் தொண்டு நிறுவனம் உரிய அனுமதிபெற்று அழைத்து வந்ததா அல்லது சட்ட விரோத மாக அழைத்து வந்ததா என விசாரித்து வருகிறோம் என்றனர்.