

சென்னையில் வார்தா புயலால் சேதமடைந்த தானியங்கி சிக் னல்கள் சீரமைக்கப்படாததால் போக்குவரத்து போலீஸார் கோடை வெயிலில் சாலை நடுவே நின்று பணி செய்ய வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 71,431 சாலை விபத்துகள் நடந் துள்ளன. இதில் 17,218 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும் பாலான விபத்துகள் சென்னை யில் நிகழ்ந்துள்ளன. சாலை விபத்துகளுக்கு வாகனங்களின் பெருக்கமும் முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் 2015-ம் ஆண்டு 2 கோடியே 15 லட்சத்து 58 ஆயிரத்து 272 வாகனங்கள் இருந் துள்ளன. தற்போது அதன் எண்ணிக்கை மேலும் அதி கரித்துள்ளன.
சென்னையில் வாகன நெரி சலை கட்டுப்படுத்தவும், வாக னங்கள் சீராக செல்லவும், விபத் துகளைத் தவிர்க்கவும் தானி யங்கி சிக்னல்கள் அமைக்கப் பட்டுள்ளன. முக்கிய சாலை சந்திப்புகளில் மட்டும் 342 சிக்னல்கள் அமைக்கப்பட்டுள் ளன. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வார்தா புயலால் பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
அதேபோன்று தானியங்கி சிக்னல்களும் சேதம் அடைந்தன. இவை கடந்த 5 மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற் போது அக்னி வெயில் கொளுத்தி வருவதால் செயல்படாத தானி யங்கி சிக்னல்கள் உள்ள பகுதிகளில் நின்று போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த வேண் டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் வேதனை தெரி விக்கின்றனர்.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத போக்குவரத்து போலீ ஸார் கூறும்போது, “சென்னை யில் வாகனங்களின் எண் ணிக்கை அதிகரித்த அளவுக்கு போக்குவரத்து போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. நெரி சல் மிகுந்த நேரங்களில் தானியங்கி சிக்னல்கள் எங்களது பணியை குறைக்கும். ஆனால், வார்தா புயலில் சிக்கி ஏராள மான சிக்னல்கள் சேதம் அடைந் துள்ளன. பல சிக்னல்கள் இன் னும் சீரமைக்கப்படவில்லை. இதனால், கோடை வெயிலில் சாலை நடுவே நின்று போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள போக்கு வரத்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “வார்தா புயலால் சேதம் அடைந்த சிக்னல்களின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்த சிக்னல்கள் அனைத்தும் சரிசெய்யப்படும். முதல் கட்டமாக சேதம் அடைந்த பழைய சிக்னல்களுக்கு பதிலாக புதிதாக 58 தானியங்கி சிக்னல்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளன” என்றனர்.