திருமாவளவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட 5 பேர் தேர்தல் வழக்கு

திருமாவளவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட 5 பேர் தேர்தல் வழக்கு
Updated on
1 min read

தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட்ட தொல்.திருமாவள வன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாக.முருகுமாறனிடம் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜனை விட 491 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தார். ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரையை விட வெறும் 49 வாக்குகள் மட்டும் குறைவாகப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் நாசர், அதிமுக வேட்பாளர் மாஃபா பாண்டிய ராஜனிடம் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந் தார். திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன், திமுக வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கத்திடம் 101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இவர்கள் அனைவரும் தங்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்களின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தனித்தனி மனுக் களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in