

திருக்கழுக்குன்றம் வட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் வரும் 23-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரையில் பூதத்தாழ்வார் அவதார மகா உற்சவம் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கவுள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கடல்மல்லை என்ற மாமல்லபுரத்தில் ஸ்தலசயனப் பெருமாள் கோயில் எழுந்தருளியுள்ளது. இந்த கோயிலில் அவதார மகா உற்சவம் நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இதற்கான பணிகளில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இதில், வரும் 23-ம் தேதி காலை மற்றும் மாலையில் திருமஞ்சனம் மற்றும் திருவீதி புறப்பாடு உற்சவமும் நடக்கவுள்ளது. 31-ம் தேதி திருத்தேர் உற்சவம் நடக்கவுள்ளது. நவம்பர் 1-ம் தேதி காலை 6.30-க்கு ஸ்ரீ பூதத்தாழ்வார் மூலவர் திருமஞ்சனம், பின்னர், ஞானபிரான் சன்னதி மங்களாசாஸனம் தொடர்ந்து திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கவுள்ளன. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படவுள்ளன. அன்னதான நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.