

தொழுப்பேடு அருகே கடை மலைப்புத்தூரில் அரசுப் பேருந்து கள் நிறுத்தி இயக்கப்படாததால் மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள கிராம மக்கள், இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப் பாக்கத்தை அடுத்துள்ள தொழுப் பேடு கிராமம், மாவட்டத்தின் எல்லையாக விளங்கி வருகிறது. இப்பகுதியில் இருந்து ஆத்தூர், புளியணை, அரசூர், ஈசூர், அறப்பேடு, கடமலைப்புத்தூர், பெரும்பேர்கண்டிகை, ஒரத்தி புறங்கால் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் மாணவர்கள், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் பேருந்துகள் மூலம் நகரப்பகுதிக்கு சென்று வரு கின்றனர்.
இதற்காக, தொழுப்பேடு அருகேயுள்ள கடைமலைப் புத்தூரில் பேருந்து நிறுத்தம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் செல் லும் பேருந்துகள் அனைத்தும் விரைவு பேருந்துகள் எனக் கூறி இங்கு நிறுத்தி இயக்கப்படு வதில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பேருந்துகளை கடைமலைப் புத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கையில்லை என அவர்கள் புகார் கூறியுள்ளனர். இதனால், மாணவர்கள் மற்றும் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பணிக்குச் செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
‘கடைமலைப்புத்தூரில் பேருந்துகளை நிறுத்தி இயக்க வேண்டும், பேருந்து தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக அரசு வெளியிட்டுள்ள தொலை பேசி எண்களை இப்பகுதியில் விளம்பரப்படுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, ‘மக்கள் சக்தி இயக்கம்’ சார்பில் தொழுப்பேடில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.